சனி, 17 ஜனவரி, 2009

கடலும் கிழவனும் - நாவல் குறித்து...சமீபத்தில் கடலும் கிழவனும் என்ற நாவலை வாசித்தேன்.வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் அதிஷ்டத்தை எதிர்நோக்கி மிச்சமிருக்கும் வாழ்க்கையை கழிக்க எண்ணும் ஓர் மீனவக்கிழவன் கடந்த 84 நாட்களாக மீன் கிடைக்காமல் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு வருகிறான்.
85 வது நாளில் தனியாக கடலுக்குச் செல்கிறான் கிழவன். நீண்ட காத்திருப்புக்குப்பின் கிழவனின் தூண்டிலில் ஒரு மீன் இரையை உண்ணுவது தெரிகிறது. கடந்த 84 நாட்களாக இந்த மீனுக்காகத்தான் காத்திருக்கிறான். மீனும் இரையை கொஞ்ச கொஞ்சமாக உண்கிறது. காத்திருப்பு நீள்கிறது. தூண்டிலில் மாட்டியிருப்பது பெரிய மீனென்பது, தூண்டிலை இழுக்கும் போதுதான் உணர்கிறான் கிழவன் . காத்திருப்பு ஒரு நாள் இரண்டு நாட்களென நீண்டு மூன்று நாளில் வந்து நிற்கிறது.


அவனுக்கும் மீனுக்கும் போராட்டம், வாழ்க்கை போராட்டமாக மாறுகிறது. கடைசியில் மீனை வென்று படகோடு கட்டி கரை திரும்பும் வழியில் அங்கங்கே சுறாக்கள் இடைமறித்து அந்த மீனை தின்கின்றன. அவற்றை எதிர்கொண்டு சுறாக்களை கொன்று வருகிறான். படிப்படியாக மீனையும் இழக்கிறான். இந்த போராட்டத்தில் அவன்து ஈட்டியையும் கத்தியையும் இழந்து வெறுங்கையுடன் கரை திரும்புகிறான்.
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) ஓர் அமெரிக்க எழுத்தாளராவார். இவர்; நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதி உள்ளார். பத்திரிகையாளரான இவரின் கடலும் கிழவனும் (The Old Man and the Sea) நாவல் இவருக்கு 1953 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் 1954 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வாங்கிக்கொடுத்தது. இவரது கடலும் கிழவனும் நாவல் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புக் களாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முதல் உலகப் போரின் போது சில காலம் இராணுவத்திலும் பணிபுரிந்தார். July 21, 1899 ஆம் தேதி பிறந்த இவர் July 2,1961 இல் தற்கொலை செய்து கொண்டார்.