சனி, 18 டிசம்பர், 2010

எங்கும் நீக்கமற நிறைந்து…

Bold

தடதடத்த சத்தத்துடன் புழுதியை கிளப்பியவாறு நாங்கள் சென்ற ஷேர் ஆட்டோ அந்தப் பள்ளியின் முன்னால் சென்று நின்றது. ஆடையில் இருந்த தூசியை தட்டிக்கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கினோம். அந்த கிராமத்தின் பெயர் பாக்காமோஹ் (Bhaakamoh) என்று என்னுடன் வந்த நண்பர் கூறினார். அக்கிராமத்திற்குச் செல்ல உத்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

நாங்கள் மொத்தம் ஏழு நபர்கள் சென்றிருந்தோம். அந்த பள்ளி வளாகத்தில் இரண்டு பள்ளிகள் இருந்தன. ஒன்று ஆரம்பப் பள்ளி மற்றொன்று நடுநிலைப் பள்ளி. நாங்கள் ஆரம்பப் பள்ளியில் நுழைந்தோம். பள்ளி வளாகத்தினுள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் அப்பள்ளியின் தலைமையாசிரியர் எங்குள்ளார் என்று கேட்டோம். அந்த குழந்தைகள் ஒரு அறையைக் கை காட்டினர். நாங்கள் அனைவரும் குழந்தைகள் கை காட்டிய அறையில் நுழைந்தோம்.

அறையில் 40 வயதில் ஒரு பெண்மணி எங்களை வரவேற்று நாற்காலியில் அமரச்சொன்னார். அவர்தான் அப்பள்ளியின் தலைமையாசிரியர் என்பதை அவர் புரிந்து கொண்டேன். என்னுடன் வந்த அனைவருக்கும் நன்றாக இந்தியில் பேசவும் படிக்கவும் தெரியும். ஆனால், நான் சுமாராகத்தான் பேசவும் புரிந்து கொள்ளவும் செய்வேன்.

இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கணக்கெடுப்பான அசர் (ASER - Annual Status of Education Report) பற்றியும், அக்கணக்கெடுப்பின் மாதிரி ஆய்விற்காக இந்தப் பள்ளிக்கு வந்துள்ளதாகவும், பள்ளியிலிருந்து சில தகவல்கள் வேண்டும் என்றும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டோம்.

அவர் இந்த ஆய்விற்கு “பள்ளியிலிருந்து என்னென்ன தகவல்கள் வேண்டும் என்று கேட்டு ஆய்விற்கு ஒத்துழைப்பு தந்தார். தலைமையாசிரியரிடம் கேட்டு வாங்க வேண்டிய தகவல்களை அனைவரும் கேட்டு குறித்துக் கொண்டோம். பிறகு பள்ளியை பார்வையிட வகுப்பறைகளுக்குள் சென்றோம்.

வகுப்பறைகள் எல்லாம் கற்றல் பொருட்கள் எதுவுமின்றி வெறிச்சோடி இருந்தன. வகுப்பில் பள்ளிப் புத்தகங்களைத் தவிர வேறெந்த புத்தகங்களையும் காண முடியவில்லை. சுவற்றினில் மட்டும் சில இடங்களில் மட்டும் உடல் உறுப்புகள், எண்கள் என சொற்பமான ஓவியங்களே கண்ணில் பட்டன. குழந்தைகள் சிலர் வகுப்பறைக்குள் இருந்தனர். சிலர் வகுப்பின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் வகுப்பின் வெளியே இருந்தனர்.

தலைமையாசிரியரிடம் குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்கப் பட்டதா? என வினவினோம். அவர் காலை 10 மணிக்கே உணவு பரிமாறப்பட்டது எனக் கூறினார். ஏன் காலையிலேயே உணவு பரிமாறப்பட்டது எனக் கேட்டேன். அதற்கான காரணத்தை அவர் கூறிய பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. உத்திரபிரதேசம் மற்றும் இன்னும் சில வட இந்திய மாநிலங்களில் காலை 7 மணிக்கு பாட வேளைகள் ஆரம்பித்து நண்பகல் 12 மணிக்கு முடிவடைகின்றன என்பது.

ஏன் அப்படி செய்கிறார்கள் என்று ஒரு நண்பரிடம் விசாரித்தேன். அறுவடை காலங்களில் குழந்தைகளை பெற்றோர்கள் தங்களின் விவசாய நிலங்களுக்கு அழைத்துச் சென்று விவசாய வேலைகளில் ஈடுபடச் செய்கிறார்கள். அதனால் குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது. அதனால்தான் இப்படி ஒரு ஏற்பாடு என்று எனக்கு விளக்கமளித்தார்.

பள்ளியில் உள்ள குழந்தைகளிடம் அன்று உணவு பரிமாறப்பட்டதா? என்று வினவினோம். குழந்தைகள் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறினார்கள். இருந்தும் ஏதாவது உணவு கண்ணில் படுகிறதா என தேடினோம். ஒரு இடத்தில் கஞ்சி கீழே சிந்தி கிடந்தது.

அடுத்ததாக பள்ளியின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டோம். அடிப்படை வசதிகளும் சற்று குறைவுதான். அந்த ஆரம்பப் பள்ளிக்கு மொத்தம் நான்கு அறைகள் இருந்தன. அதில் மூன்று அறைகளில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வகுப்பறையின் தரைகள் சேதமுற்று அங்கங்கே குழிகளாக காணப்பட்டன. பள்ளியின் வராந்தாக்களில் சில ஆடுகள் நின்றுக்கொண்டிருந்தன.

குழந்தைகள் குடிக்க தண்ணீர் ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், பள்ளி வளாகத்தினுள் ஒரு கைப்பம்பு போடப்பட்டு இருந்தது. அதில் தண்ணீர் வருகிறதா? என அடித்துப் பார்த்தேன். பல பலத்த அடிகளுக்குப் பின் அதிலிருந்து தண்ணீர் கொட்டியது. கொஞ்சம் கையால் அள்ளி குடித்துப் பார்த்தேன். பரவாயில்லை குடிக்கலாம் என்று தோன்றியது.

அடுத்து கழிவறைகளை பார்வையிட சென்றோம். அங்கு இரண்டு கழிவறைகள் இருந்தன. அதில் ஒன்று பழுது அடைந்து குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தன. மற்றொன்று பூட்டப்பட்டு இருந்தது.

உத்திரப்பிரதேச பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிகளுக்கும் பல வித்தியாசங்களைக் காண முடிந்தது. ஆனால் ஒரே ஒரு ஒற்றுமையை இரண்டு மாநில பள்ளிகளில் என்னால் பார்க்க முடிந்தது. அது குழந்தைகளின் தன்னம்பிக்கையை சிதைக்கும் ஆசிரியரின் பேச்சும் செயல்களும்தான். இந்த அனுபவம் கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து பார்த்து வருகிறேன். ஆனால், இது வட இந்திய மாநிலங்களிலும் காணப்பட்டதை எண்ணி வருந்துகின்றேன்.

அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் சில கணித கணக்குகளைச் செய்ய சொல்லி ஆய்வு செய்தோம். பெரும்பான்மையான குழந்தைகளால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. உடனே அங்கிருந்த தலைமையாசிரியர் அந்த குழந்தைகளைக் குறைச் சொல்ல ஆரம்பித்தார்.

யாராவது பள்ளிக்கு பார்வையிட சென்றாலோ அல்லது குழந்தைகளின் கல்வித் திறனை பார்வையிட சென்றாலோ கற்றல் திறனில் குறைவாக உள்ள குழந்தையை நோக்கி ஆசிரியர் சொல்லும் ஒரே வார்த்தைஅது ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லைபள்ளிக்கு சரியாக வரும் குழந்தை என்றால், “அதுக்கு புத்தி கொஞ்சம் குறைவு என்று குழந்தையின் முன்னாடியே அக்குழந்தையின் தன்னபிக்கையை சுக்குநூறாக உடைக்கும் ஆசிரியர்கள் எவ்வளவு வெறுக்கத் தக்கவர்கள். தங்கள் குறையை அந்த குழந்தைகளின் மேல் ஏற்றி வைத்து தப்பிக்கும் இது போன்ற ஆசிரியர்கள் குற்றவாளிகளை விட மோசமானவர்கள்தானே!

இந்த நிலை என்று மாறுமோ என்று நொந்தபடி பள்ளியை விட்டு வெளியே வந்த எங்களை அதே ஷேர் ஆட்டோ ஏற்றிக் கொண்டு மீண்டும் தடதடத்தபடியே புழுதியை கிளப்பிக் கொண்டு பறந்தது.


செவ்வாய், 27 அக்டோபர், 2009

ஒற்றை மரத்தடி வேர்

வெகு நேரமாகவே கோணலாய் தொங்கி கொண்டிருந்த கரீம் பீடி மாத காலண்டரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுல்தானா. எப்படியும் அரைமணி நேரத்திற்கும் மேலிருக்கும். வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.. எதிர் வீட்டில் சற்று கூடுதலாகவே சிரிப்பொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. சிரிப்பு சத்தத்தை கேட்டவுடன் எழுந்து வந்து பார்த்தாள். எதிர் வீட்டு பாட்டியும் அவள் மகளும் தனது மகனுக்காக பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து இப்படித்தான் திடீரென்று சிரிப்பொலிகள் எழும் அடங்கும். இவளுக்கும் வயது முப்பதை தாண்டியிருந்தது. வேலூருக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

சேத்துப்பட்டில் அப்பாஜானுடன் வீட்டிலிருக்கும் போதே சில பொறுப்புகள் இவள் தலையில்தான் விழும். இதுவரை இரண்டு அக்காள்களுக்கு நிக்காஹ் முடிச்சாச்சி. அவர்களை கரையேத்தியதில் சரிபாதி பங்கு இவளுடையது. பக்கத்து கழனிகளிலும் காடுகளிலும் களையெடுத்தும் கலக்காய் பறித்தும் சேர்த்து வைத்த காசு அவர்களின் நிக்காஹ்வுக்காக கரைந்து போனது. குடும்பத்துக்கு ஒத்தாசையாக இருந்த அண்ணனும் டிரைவரா போன இடத்துல ஆக்சிடென்டுல மௌத்தாகிப் போனது மத்தவங்களைவிட இவளுக்கு இன்னும் பளுவைக் கூட்டியது. டிரைவர் வேலைக்கு போயி குடிச்சிட்டு ஒன்னுக்கு பாதியா கொண்ணாந்து வீட்டுக்கு போடற அப்பாஜானும், அவரோடு எப்போதும் மல்லுக்கு நிக்கிற அம்மாவும்தான் இவளது பிரச்சினை. அடிக்கடி ஊர்வம்பை வாங்கிட்டு வர்ற தம்பியின் போக்கும் சரிவர இல்லாதது இவளுக்கு இன்னும் குடும்பத்த பத்தின கவலையை அதிகப்படுத்தியது.

ஒரு கட்டத்துல அம்மாவுக்கும் அப்பாஜானுக்கும் சண்டை வலுத்து போயி அப்பாஜான் எங்கேயோ சென்று விட்டு இதுவரை வீடு திரும்பாதது இவளை இன்னும் உலுக்கியது. தம்பியும் சரியில்லை. மூத்த மகனாக இருக்க வேண்டிய முதல் மருமகனுக்கோ வருடந்தவறாமல் வசவசவென ஏழு குழந்தைகளை பெற்று தன் ஆண்ம பலத்தை நிரூபிக்கவும், மூன்று மாதத்திற்கொருமுறை பிள்ளைகளோடு வந்து விருந்துண்ணவுமே சரியாக இருந்தது. இரண்டாவது மருமகனோ இவர்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை. ஆண் இல்லாத குடும்பமாகத்தான் தோன்றியது இவளுக்கு. அந்த குடும்பத்தின் நல்லது கெட்டதென எல்லாம் இவள் தலையில் தான். எப்போதாவது மனசு கனத்திருந்தால் செஞ்சி ரோட்டிலுள்ள சைதானி பீவி தர்காவுக்கு சென்று ஜியாரத் செய்துவிட்டு வருவதும், அங்குள்ள ஒற்றை மரத்தடியில் அமர்ந்து அதனோடு பேசிவிட்டு வருவாள். மனசும் லேசாக மாறியிருக்கும். முன்பு போல இப்போதெல்லாம் கழனிக்காட்டில் வேலைகள் அதிகம் வருவதில்லை. மழை பெய்யாமல் காய்ந்து போன வயலில் என்னதான் இருக்கும் எல்லாமே மாறிப்போனது. எப்படியோ சின்ன அக்காளின் உதவியால் வேலூருக்கு குடும்பம் வந்து ஒரு ஆசிட் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தாச்சு.
ஒரு சில நேரங்களில் இவளது நிக்காஹ் பற்றி பேச்சு எழும். அதே வேகத்தில் அப்பேச்சு காணாமல் போய்விடும். இவளுக்கும் ஆசைதான். இவள் சோட்டுப் பெண்களான ருக்கையாவும் ஷர்மிளாவும் ஆளுக்கு இரண்டு குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு வருவதையும் போவதையும் பார்க்கும் போது இவளது நெஞ்சு பெருமூச்செரியும். ஆனால் குடும்பத்தையும் அம்மாவையும் யார் பார்த்துக்கொள்வார்கள். யாரும் தயாராகயில்லை. தம்பியும் ஏதோ ஒன்னுக்கு பாதியாய் வீட்டிற்கு தனது பங்களிப்பை செய்துகொண்டிருந்தான். இது அப்பாஜானை நினைவூட்டியது. அவர் இருந்திருந்தால் யாரையாவது நிக்காஹ் செய்து கொண்டு போயிருப்பாள்.
“உனக்காக இல்லாட்டியும் பரவாயில்ல.. அடுத்து தம்பி இருக்கான்ல. அவனுக்கு நிக்காஹ் ஆக வேண்டாமா?”
ன் மென்மையான வார்த்தைகளும், எளிதாக பழகும் சுபாபமும் இவளை வெகுவாக ஈர்த்திருந்தது. இவள் சுலபமாக யாரிடமும் பேசுவதில்லை. குறிப்பாக ஆண்களிடம். அப்பாஜான் இல்லாத பிறகு நிறைய மைனர்களும் திருமணமான தடியன்களும் இவளை சுற்றிய போதிலிருந்து தான் தன் பேச்சைக் குறைத்துக் கொண்டாள். இவள் அவனின் வார்த்தைக்கு மயங்கி கட்டுபட்டிருந்தாள். இதற்கு அவளின் குடும்பச் சூழல் ஒரு காரணமாக இருந்தாலும், தனிமையின் கொடுமை இவளை உச்சத்தில் வைத்திருந்ததும் கூட.
முதலாளி இல்லாத ஒரு மாலைப் பொழுத
எதிர் வீட்டுப் பாட்டி சொன்ன போதுதான் அவர்களின் உள்நோக்கம் இவளுக்கு புரிந்தது. இவளின் சம்மத்தத்தோடு தம்பிக்கு நிக்காஹ் முடிந்தது. மனசு கனக்கும் போதெல்லாம் மாடியில் அமர்ந்து அழுவாள். அருகே சைதானி பீவியும் ஒற்றை மரத்தடி வேரும் இல்லாதது இன்னும் மனசை கனக்க வைத்தது. இப்போதெல்லாம் இவளுக்கும் தம்பி மனைவிக்கும் ஏதாவது சிறுசிறு பிரச்சினை வந்து கொண்டிருந்தது. சின்ன சின்ன வி~யத்தையும் பூதகரமாக்கிக் கொண்டிருந்தாள் தம்பி மனைவி. அம்மாவும் தம்பியும் மனைவி பக்கம்தான்.
இந்த நேரத்தில் தான் ஆசிட் கம்பெனியில் அறிமுகமானான் குமார். ஒரு வயது மூத்தவன். பட்டப் படிப்பும் முடித்திருந்தான் என்றாலும் இவளைப் போலவே ஆசிட் பாட்டில்களோடு மல்லுக்கட்ட வேண்டியிருந்தது அவனுக்கு. அவ
னில் காலி பாட்டில்களின் அறையில் இவர்களின் தனிமை சில பாட்டில்களோடு நொறுங்கிப் போனது. அந்த பொழுதின் அடையாளமாக இவளின் வயிற்றில் அவனது விதை ஊன்றியிருந்தது. அதன் பிறகு இருவரும் மும்முரமாகவே பேசிக்கொள்வார்கள். அதில் பெரும்பாலும் அது அந்த விதையைப் பற்றித்தான் பேச்செழும்..
புத்தகங்கள் இருந்ததும் தான் இவளுக்கும் அந்த வீட்டிற்குமான உறவை வலுப்படுத்தியிருந்தது. இலக்கியம் பரிச்சயம் இல்லாத போதிலும் அது குறித்து அவனிடம் விவாதிப்பாள். இது அவனுக்கு சற்று பிரமிப்பாகவே தோன்றும். வாழ்க்கை தானே இலக்கியம். வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் பயணம் செய்தவள் தானே அவள். அதை அவன் அறிந்திருக்கவில்லை. அன்றும் ‘உடன்போக்கு’ குறித்த அன்றைய வகுப்பை இவளோடு பகிர்ந்து கொண்டான். “இந்த காலம் மாதிரியே அந்த காலத்திலும் ஆணும் பெண்ணும் காதலிச்சு வீட்டுக்குத் தெரியாம ஓடிப் போயிருவாங்களா அத்த.. செவிலித்தாய்னு ஒருத்தங்க அந்த பொண்ண தேடிப் போயி அவெங்க ரெண்டு பேரும் குடும்பம் நடத்துறத மறைஞ்சிருந்து பாத்துட்டு வந்து அந்த பெண்ணோட அம்மாகிட்ட சொல்லுமாம்…” என்று தான் வியப்பிலாழ்ந்தவற்றை பகிர்ந்து கொண்டிருந்தான். ஏதோ நினைத்தவள் “சரிடா.. நான் கிளம்புறேன் நல்லா படி..” ன்னு அவன் வீட்டு வாசல் தாண்டினாள்.
காலை இவளது அக்காள்களும் அவர்களது கணவர்களும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டும் இவளது அம்மாவையும் தம்பியையும் ஏசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சிலிருந்து சுல்தானா வீட்டை விட்டு போயிருந்ததை அறிய முடிந்தது. இரண்டு மருமகன்களும் தங்களின் கவுரவம் கெட்டுவிட்டதாக அரற்றிக
மாலைப்பொழுதுகளில் பக்கத்து வீட்டிற்கு குடி வந்திருந்த அண்ணன் மகன் சிராஜிடம் பேசிவிட்டு வருவது இவளுக்கு ஆறுதலாயிருந்தது. சிராஜ் இவளுடைய அத்ததையின் பேரன். ஊரிசு கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்து வந்தான். இவளுக்கு கவிதையில் கொஞ்சம் நாட்டம் இருந்ததும், சிராஜிடம் நிறை
ய கொண்டு வயிற்றில் குழந்தைகளை சுமந்திருந்த தனது மனைவிகளை நோக்கி அடிக்கடி கைஓங்கியபடி இருந்தனர். நல்லவேளை தம்பி மனைவி அம்மா வீட்டிற்கு சென்றிருந்தாள்.
ஓரிரு வாரங்கள் கழித்து சின்ன அக்காள் அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தாள்.
த்துல தாலியோட பொட்டு வச்சிகிட்டு போறத..” ன்னு சொல்லி தலையில் அடித்துக் கொண்டு நின்றாள் சின்ன அக்கா. “ சைதானி பீவி…. உனக்கே இது நல்லாயிருக்கா….” வயிற்றில் அடித்துக் கொண்டு
“ நம்ம குட்டிபாபு அந்த பறத்தெரு மேட்டுல நம்ம சுல்தானாவ பார்த்தானா.. க
ழு தரையில் சாய்ந்தாள் அம்மா. சுவற்றில் கோணலாய் தொங்கி கொண்டிருந்த காலண்டர் காற்றில் அசைந்து கீழே விழுந்தது.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

மனுசங்க... - சிறுகதை

கையில் தூக்கோடு வீட்டிற்குள் நுழைந்தான் சடையாண்டி. “இந்தா புள்ள! குழந்தைகளுக்கு டீத் தண்ணிய ஊத்திக் கொடு ஆறிடப்போகுது” என்று அஞ்சைலையை எழுப்பினான். கண்களைத் தேய்த்துக் கொண்டு டீ தூக்கை கையில் வாங்கி கீழே வைத்து விட்டு; வாசலில் இருந்த பானையில் தண்ணீர் அள்ளி முகத்தில் அடித்தாள். தெரித்த நீர்த்துளிகளில் வானவில்கள் தோன்றின. முந்தானையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டு கண்ணாடி கிளாசை எடுத்து டீயை ஊற்றி பொன்னியையும் பாலுவையும் எழுப்பி டீ கிளாசை கைகளில் திணித்தாள்.

டீயை அவர்கள் இருவரும் குடிப்பதைப் பார்த்து பாசத்தில் லயித்து போயிருந்தாள் அஞ்சலை. அவள் தன் வறுமையின் துன்பக் கோடுகளை தன் பிள்ளைகளின் மகிழ்வால் அழித்துக் கொண்டிருப்பவள். சாக்கடையில் இறங்கி ஊரை சுத்தப்படுத்தும் தன் கணவனின் சொற்ப சம்பாதியத்திலும் இரண்டு வீட்டில் பாத்திரம் கழுவும் வருமானத்தில் இரு குழந்தைகளை வளர்த்து வருகிறாள்.

பொன்னி அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். தன் தம்பியை தினமும் தன்னுடன் கூட்டிக் கொண்டு போகும் வழியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் விட்டுச் செல்வாள். பள்ளியில் பொன்னியிடம் சரியாக பேசுவதும் பழகுவதும் இல்லை. பள்ளியில் படிக்கும் ராசாத்தி தன் தோழிகளிடம் பொன்னியின் அப்பா செய்யும் வேலையைப் பத்தி சொல்லி கேலி செய்வாள்.

பொன்னிக்கும் ராசாத்திக்கும் இதனால் நிறைய முறை சண்டையே வந்துள்ளது. இருப்பினும் பொனிக்கு தன் அப்பாவின் வேலை சற்று கவலை தந்தது. ச்சே... மத்தவங்கள மாதிரி ஏன் அப்பா வேலை செய்யக்கூடாது. பாழாய் போன இந்த பீ அள்ளுர வேலையை ஏன்தான் செய்யறாரோ, மத்தவங்கள மாதிரி என்னாலே அப்பா செய்ற வேலய சொல்ல முடியலயே என்று தனக்குள் ஆதங்கப்பட்டுக் கொள்வாள்.

இதைப்பற்றி நிறைய தடவை தன் அப்பாவிடம் கேட்டிருப்பாள். அவரும், “என்னம்மா பண்றது எனக்கு தெரிஞ்ச பழகிப் போன வேலம்மா... இது ஒன்னும் தப்பில்ல, ஊர சுத்தப்படுத்துற வேலையத்தானே நான் செய்றேன். இதிலே என்ன குறைச்சல் இருக்கு” என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவளை சமாதானப் படுத்துவான். வாரம் இருமுறை ராசாத்தியின் வீட்டிற்கு சென்று கக்கூஸ் கழுவி விட்டு வருவான் சடையாண்டி. அன்று ஞாயிற்றுக் கிழமை. இரவு பெய்த அடைமழையால் தெருவெல்லாம் தண்ணீர் நிரம்பியிருந்தது. சாக்கடை கழிவுகள் எல்லாம் தெருவை ஆக்கிரமித்திருந்தன. விடுமுறை ஆனதால் ராசத்தி கொல்லைப் புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அன்று ராசத்தியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் சடையாண்டி. வீட்டின் அருகே செல்லும் போது நாலஞ்சு பேர் கத்திக்கிட்டு ராசாத்தி வீட்டின் பக்கம் ஓடினார்கள். இவனுக்கு ஒன்னும் புரியவில்லை. இருந்தாலும் இவனும் ஓடினான். அங்கு திறந்து கிடந்த மலக்குழியில், விளையாடிக் கொண்டிருந்த ராசாத்தி விழுந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தாள். அங்கே பத்து பேருக்கு மேல் “காப்பாத்துங்க... காப்பாத்துங்க...” என்று பதறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதில் ஒருவர் இறங்கி இருந்தால் கூட அவளை மேலே தூக்கியிருக்க முடியும். ஆனால், மலக்குழியில் இறங்குவதற்கு அஞ்சியும், அருவருப்பை உணர்ந்தும் யாரும் இறங்காமல் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராசாத்தியின் தாய், தந்தையும் கூட

பதறிப்போய் வந்த சடையாண்டி அங்கே வந்து பார்த்ததும் “என்னப்பா.. யாராவது எறங்கி தூக்கலாம்லே” என்று சொல்லிக் கொண்டு சடாரென்று.. என்று இறங்கி மூச்சு விட திராணியற்றுப் போய் கிடந்த ராசாத்தியை தூக்கி மேலே கிடத்தினான். அருகே இருந்த கிணற்றில் தண்ணியை சேந்தி ராசாத்தியின் மேல் ஊற்றி சுத்தம் செய்தான்.

அவள் முகத்தில் தண்ணி தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தான். “என்ன மனுசங்க நீங்க.. குழந்தை செப்டிக் டேங்ல விழுந்திடுச்சி யாராச்சும் போய் உடனே தூக்குவீங்களா.. அத விட்டுட்டு சுத்தி நின்னு வேடிக்கை பாக்கிறீங்களே ஏம்மா நீங்க பெத்தவங்கதானே உங்க புள்ள உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கு நீங்களும் அவங்கள போல கத்திக்கிட்டு நிக்கிறீங்களே இதிலென்னம்மா அசிங்கம். வவுத்துக்குள்ள இருந்தா அசிங்கமில்ல ஆனா அதுவே வெளியே வந்திடிச்சின்னா அசிங்கமா போயிடுதா..? நானும் உங்கள மாதிரி அசிங்கம் பார்த்து நின்னுட்டா உங்க வீடே நாறிப்போயிடும். அசிங்கம்கிறது நம்ம தொழில்லயும் செயல்லயும் இல்லீங்க நம்ம மனௌசுலதாங்க இருக்கு” என்று சொல்லிக் கொண்டு தன் மேலும் நீரை ஊத்தி சுத்தம் செய்துக் கொண்டான். அவனை சுற்றி நின்னவங்க நாற்றம் தாங்காமல் அங்கிருந்து பேசாம கலைய ஆரம்பித்தார்கள்.

ராசாத்தியின் பெற்றோரும் ராசாத்தியும் ஒரு நல்ல மனிதனை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். சடையாண்டி அங்கிருந்து போய்க்ம் கொண்டிருந்தான். மறுநாள் காலை பள்ளியில் கையில் இனிப்போடு பொன்னிக்காக காத்திருந்தாள் ராசாத்தி.

சனி, 17 ஜனவரி, 2009

கடலும் கிழவனும் - நாவல் குறித்து...சமீபத்தில் கடலும் கிழவனும் என்ற நாவலை வாசித்தேன்.வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் அதிஷ்டத்தை எதிர்நோக்கி மிச்சமிருக்கும் வாழ்க்கையை கழிக்க எண்ணும் ஓர் மீனவக்கிழவன் கடந்த 84 நாட்களாக மீன் கிடைக்காமல் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு வருகிறான்.
85 வது நாளில் தனியாக கடலுக்குச் செல்கிறான் கிழவன். நீண்ட காத்திருப்புக்குப்பின் கிழவனின் தூண்டிலில் ஒரு மீன் இரையை உண்ணுவது தெரிகிறது. கடந்த 84 நாட்களாக இந்த மீனுக்காகத்தான் காத்திருக்கிறான். மீனும் இரையை கொஞ்ச கொஞ்சமாக உண்கிறது. காத்திருப்பு நீள்கிறது. தூண்டிலில் மாட்டியிருப்பது பெரிய மீனென்பது, தூண்டிலை இழுக்கும் போதுதான் உணர்கிறான் கிழவன் . காத்திருப்பு ஒரு நாள் இரண்டு நாட்களென நீண்டு மூன்று நாளில் வந்து நிற்கிறது.


அவனுக்கும் மீனுக்கும் போராட்டம், வாழ்க்கை போராட்டமாக மாறுகிறது. கடைசியில் மீனை வென்று படகோடு கட்டி கரை திரும்பும் வழியில் அங்கங்கே சுறாக்கள் இடைமறித்து அந்த மீனை தின்கின்றன. அவற்றை எதிர்கொண்டு சுறாக்களை கொன்று வருகிறான். படிப்படியாக மீனையும் இழக்கிறான். இந்த போராட்டத்தில் அவன்து ஈட்டியையும் கத்தியையும் இழந்து வெறுங்கையுடன் கரை திரும்புகிறான்.
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) ஓர் அமெரிக்க எழுத்தாளராவார். இவர்; நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதி உள்ளார். பத்திரிகையாளரான இவரின் கடலும் கிழவனும் (The Old Man and the Sea) நாவல் இவருக்கு 1953 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் 1954 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வாங்கிக்கொடுத்தது. இவரது கடலும் கிழவனும் நாவல் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புக் களாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முதல் உலகப் போரின் போது சில காலம் இராணுவத்திலும் பணிபுரிந்தார். July 21, 1899 ஆம் தேதி பிறந்த இவர் July 2,1961 இல் தற்கொலை செய்து கொண்டார்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

வார்த்தைகளும் சில மவுனங்களும்...வார்த்தைகளுக்கும் மவுனங்களுக்கும்
ஊசிமுனை அளவுதான்
இடைவெளி

ஊதிய பலூனில்
ஊசி புகுவது போலத்தான்
வார்த்தைகளும் மவுனங்களும்
நிகழ்கின்றன

வார்த்தைகள் எல்லாவற்றையும்
நியாயப்படுத்துகின்றன
சில நேரங்களில்
அர்த்தமற்றும் போகின்றன

மவுனங்கள் யோசிக்கின்றன
சில நேரங்களில்
பலவீனமாய் தூக்கியும்
எறியப்படுகின்றன

மவுனங்களின் அழுத்தத்தால்
உடைத்தெறியப்படும் வார்த்தைகளால்
மட்டுமே தாக்கத்தை
ஏற்படுத்த முடிகிறது.

பிரியும் நேரத்தில்...பிரியும் நேரத்தில்...
- நாணற்காடன்.

ஹைக்கூக் கவிஞர்களில் சமீப காலமாய் கவனம் பெற்று வருபவர் கவிஞர் நாணற்காடன். சமீபத்திய இவரின் ஹைக்கூத் தொகுப்பு பிரியும் நேரத்தில். இத்தொகுப்பு இவருக்கு கவிஞர் தாராபாரதி விருதையும், புதுச்சேரி சுந்தரம்பாள் அறக்கட்டளை விருதையும் பெற்றுத்தந்துள்ளது.சாணம் மெழுகிய வீடு

தரை முழுக்க

அம்மாவின் விரல்கள்-என்னும் ஹைக்கூவில், அம்மாவின் பாசம் கைவிரல்களால் வீடு முழுக்க தீட்டப்பட்ட ஓவியமாக காட்சியளிக்கிறது. இக்கவிதை கன்னிக்கோவில் இராஜாவின் குறுஞ்செய்தி இதழில் வெளிவந்து கவனத்தை பெற்றது. அம்மாவின் நினைவுகளை சுமந்தபடி பயணிக்கையில் மீண்டும் ஒரு கவிதையால் அப்பாவின் பாசத்தை வருடுகிறார்.


தொட்டிலில் குழந்தை

தாலாட்டும் அப்பா

கொலுசில்லா வீடுஇக்கவிதையும் குறுஞ்செய்தி இதழில் வெளிவந்து பாராட்டைப் பெற்றது


தேர்வு அறை

படபடக்கும் கேள்வித்தாள்

சன்னலோரம் அணில்

தேர்வறையில் கேள்வித் தாளில் முகம் புதைந்து கிடக்கிற தருணங்களில் கூட சன்னலோரம் விளையாடும் அணிலை இரசிக்கும் குழந்தை மனசு இக்கவிஞருக்கு. கவிஞனின் பார்வை எதையும் அழகியல் தன்மையோடு பார்க்கும் என்பது இதன் மூலம் புலனாகிறது.


அலுவலக அவசரம்

கதவிடுக்கில்

இரைதேடும் பல்லி


- என்ற கவிதையில் வயிற்றுப் பிழைப்பிற்காக அவசரமாய் வயிற்றை நிரப்பிக் கொண்டு அலுவலகம் ஓடுகையில், இரைக்காக கதவிடுக்கில் தவம் கிடக்கும் பல்லிக்காக இரங்கும் கவிஞரின் மனசு,


காலை நேர இழவு வீடு

நழுவும் மனிதர்கள்

எட்டு மணியாகிவிட்டது


-என்ற கவிதையில் இழவு வீட்டில் துக்கத்தை காலை எட்டு மணிக்கு முடித்துக் கொண்டு அலுவலகம் பறக்கும் மனிதர்களைக் கண்டு சாடுகிறது.


குல்லா பூணூல் அங்கி

புதைந்து கிடக்கின்றன

பருத்தி விதைகுள்


-என்னும் கவிதை, அன்பை கற்பிக்க உருவான மதங்கள் மனிதத்தை தொலைத்துக் கொண்டிருக்கையில், அதன் மூலத்தை மீண்டும் துல்லியமாக நினைவுப் படுத்தியிருப்பது கவிஞரின் சமத்துவத்தை புலப்படுத்துகிறது.


வேலைக்குப் போகும் விதைவை

பாதுகாப்பாய்

நெற்றிப் பொட்டு


-என்னும் கவிதை, விதைவைப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது சமூகத்தின் மூடநம்பிக்கை வேர்களை அறுக்கமட்டுமல்ல, அலுவலகங்களில் தனக்கான ஒரு பாதுகாப்பை உருவாக்குகிறது என்பதையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.


இன்னும் இத்தொகுப்பில் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டிய, வாசிக்கத் தூண்டிய ஹைக்கூக்கள் விரவிக்கிடக்கின்றன. கவிஞர் நாணற்காடன் இத்தொகுப்பின் அனைத்துப் பக்கங்களிலும் அன்பு, பாசம், காதல், இரங்கல், அக்கறை, கோபம், யதார்த்தம், சமத்துவம் என அனைத்தையும் பரப்பி இத்தொகுப்பை வாசித்து முடித்து பிரியும் நேரத்தில் மனதை கலங்கடிக்கிறார். இவரின் ஹைக்கூப் பயணங்கள் தொடரட்டும்.


குலுக்கிய கைகளில்

நட்பின் வாசம்

பிரியும் நேரம்.வெளியீடு: கவின் நூல் பயணம், வந்தவாசி.


முகவரி:

நாணற்காடன்,

55,விவேகானந்தர் நகர்-5,

இராசிபுரம்(அஞ்சல்),

நாமக்கல் மாவட்டம்- 637 408.

செல்: 9942714307.